திருச்சியிலிருந்து மணப்பாறை நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஒன்று திண்டுக்கல் சாலையில் கருமண்டபம் பகுதியில் முன்னால் சென்ற லாரியின் மீது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதியது. திடீரென நடைபெற்ற இந்த கோர விபத்தினால் அதிர்ச்சியுற்ற பயணிகள் செய்வதறியாது திகைத்து போயினர்.
அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த திருச்சி கிழக்கின் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சேவகர் முனைவர் இனிகோ இருதயராஜ் அந்த விபத்தினை கண்டவுடன் உடனடியாக தனது வண்டியனை நிறுத்தி உடனே மீட்பு பணியில் ஈடுபட்டார். நடைபெற்ற சம்பவத்தில் இருந்து மீளும் வகையில் ஆறுதல் அளித்து மாற்று பேருந்து மூலம் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்தார் எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ்.
கடைசியாக போக்குவரத்து துறை அதிகாரிகளை அழைத்து பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்ப தகுந்த அறிவுரைகளை வழங்கி இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments