Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அரசு பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்கள்தான் அதிகம் இருசக்கர வாகனங்களில் வருவது கண்காணிப்பு மூலம் தெரியவந்துள்ளது -மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல் படைப்பாற்றலை வெளிக்கொணர்ந்து ஊக்குவிக்கும் வகையில் இந்திய அறிவியல் இயக்கத்துடண் இணைந்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியினை திருச்சி இ.ஆர்.மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த அறிவியல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் சிவராசு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து, மாணவ, மாணவியர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு அவர்களை பாராட்டினர். இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 9முதல் 12ம்வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் சொட்டுநீர் பாசன வழிமுறைகள், ஆழ்துறை கிணறுகளை உணர்த்தும் கருவி, கிளீனிங் ரோபா உள்ளிட்ட 138 அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும் மாணவ, மாணவியர்கள் பலரும் இக்கண்காட்சியினை பார்வையிட்டு விளக்கங்களை கேட்டறிந்து வருகின்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறுகையில்… பள்ளியில் படித்ததை செய்முறையாக செய்யும் போது மாணவர்களுக்கு எளிதில் புரியும், பேருந்துகளில் படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்வது குறித்து சம்பந்தபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட கவுன்சிலிங் எடுப்பதுதான் சரியானது, பேருந்தில் கூட்டங்களின்போது தன்னைஅறியாமல் டீன்ஏஜ் என்பதால் மாணவர்கள் இதனை செய்கிறார்கள், திருச்சி மாவட்டத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை.

அவ்வாறு நடந்தால் மாணவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதுடன் கவுன்சிலிங்கும் வழங்கப்படும். பள்ளிகளுக்கு பேருந்து அல்லது பெற்றோருடன்தான் இருசக்கரவாகனத்தில் வரவேண்டும் மாறாக 18 வவயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் வருவதை ஆர்டிஓ கொண்டு கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணியும்பட்சத்தில் 4வது அலையை தடுக்கலாம் என்று தெரிவித்தார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *