Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் அரசு அலுவலர் வீட்டில் பீரோவை தூக்கிச் சென்று 4 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மரவனூரில் ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர் சாவித்திரி , இவருடைய மகன் மணிகண்டன் இவர் தமிழ்நாடு காகித ஆலையில் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார், மணிகண்டன் மனைவி ஜெயப்பிரியா மணப்பாறை அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

நேற்றிரவு கணவன் மனைவி மற்றும் பிள்ளைகள் அனைவரும் மாடிவீட்டில் உள்ளே AC அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்த பொழுது, பின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் மணிகண்டன் உறங்கிக்கொண்டிருந்த அறையை பூட்டிவிட்டு ,வீட்டின் மற்றொரு அறையில் இருந்த பீரோவை வீட்டிற்கு வெளியே 70 மீட்டர் தொலைவில் தூக்கி சென்று கருவேலம் காட்டில் பீரோவை உடைத்து அதில் இருந்த நெக்லஸ், தோடு உள்பட 9 பவுன் சுமார் 4 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளையும், திருடி விட்டார்கள்.

3000 மதிப்பு உடைய வெள்ளை பிள்ளையார் (வெள்ளி)1000/ ரூபாய் பணம் உள்பட திருடி சென்றனர். காலையில் மணிகண்டன் எழுந்ததும் வீட்டின் கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டதையறிந்து அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்து வீட்டை திறந்து வெளியில் வந்து மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை ஆய்வு செய்தனர். மோப்ப நாய் லீவியும் வரவழைக்கப்பட்டது.

மேலும் அதே பகுதியில் உள்ள சித்தாநத்தம் கிராம நிர்வாக அலுவலர் சிவா என்பவரது வீட்டில் இருந்த இருச்சக்கர வாகனமும் திருடர்கள் திருடி சென்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *