திருச்சி திருவெறும்பூர் அடுத்த பத்தாளப்பேட்டையில், நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டுக்கு வந்த மகன் சரவணக்குமார், தனது தந்தை சுப்பிரமணியத்தை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.
அதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணி, திருச்சி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று சிகிச்சை பலனின்றி பலியானார். தந்தையை தாக்கிய வழக்கில் மகன் சரவணக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திருச்சி திருவெறும்பூர் காவல்நிலைய போலீசார் அதனை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO
Comments