பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தை சேர்ந்த பெண்கள் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அழுந்தலைப்பூர் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி செடியில் பருத்தியினை பிரித்தெடுக்கும் வேலைக்கு வந்தனர்.
பின்னர் வேலையை முடித்து விட்டு சரக்கு ஆட்டோ மூலம் வீடு திரும்பிய போது அழுந்தலைப்பூர் கிராமத்தில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் ஆட்டோவில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
பின்னர் காயமடைந்த அனைவரும் லால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 4 பெண்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO
Comments