Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு நிதி உதவி கேட்கும் செய்தியாளர்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் வசித்து வருபவர் எம்.பூபதி. இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த 12 ஆண்டுகளாக செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திடீரென கடந்த ஜனவரி மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, தற்போது ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனை செய்த மருத்துவர்கள் இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்து உள்ளதாகவும் தற்போது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும் உடனடியாக ரத்த சுத்திகரிப்பு ( டயாலிசிஸ்) செய்ய வேண்டும் என்று அறிவுற்றுத்தியுள்ளனர். 

அதன்படி வாரத்திற்கு மூன்று முறை கடந்த மூன்று மாதமாக ரத்த சுத்திகரிப்பு செய்து வருகிறார். இந்நிலையில் உடனடியாக மாற்று சிறுநீரகம் பொருத்துமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன்படி அவருடைய அம்மாவின் சிறு நீரகத்தை பொருத்துவதற்காக மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஈரோட்டில் உள்ள கோவை மெடிக்கல் சென்டரில் பூபதியும் அவரின் அம்மாவும் மருத்துவ பரிசோதனை செய்த அப்போது அவருடைய அம்மாவின் சிறுநீரகத்தை பொருத்திக் கொள்ளலாம் என்று பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இன்னும் 10 முதல் 15 தினங்களில் எனது அம்மாவின் சிறுநீரகத்தை பொருத்துவதற்காக மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். ஒரு ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். 

மனைவி ஜோதிமணி திருவாசகம் என்ற மகனும் ஹரன், தரண் என்ற வயது இரட்டை மகன்களும் என மூன்று மகன்கள் உள்ள நிலையில் வறுமையில் வாடி வருகிறேன். தற்போது பொருளாதாரத்தில் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். இந்த மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்கான பரிசோதனைகள் செய்வதற்கே அதிகப்படியான தொகை செலவு ஆகிவிட்ட நிலையில் தற்போது மாற்று சிறுநீரகம் அம்மாவிடம் இருந்து எடுத்து எனக்கு பொருத்துவதற்கு அதிகப்படியான தொகை செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே மிகவும் ஏழ்மை நிலைமையில் உள்ளஅவருக்கு இந்த மருத்துவ உதவிக்கு உதவி செய்து உயிரை காப்பாற்ற உதவிட வேண்டும் என்று கேட்டுள்ளார். இவருடைய மருத்துவ உதவிக்கு உதவ நினைப்பவர்கள் கீழுள்ள வங்கி கணக்கில் பணத்தை அனுப்பி விடலாம் உதவி செய்யலாம் 

எம்.பூபதி – 9786646401

வங்கிக் கணக்கு விபரம்:

சிட்டி யூனியன் வங்கி ஒட்டன்சத்திரம்.

A/c No:500101010598112

IFSC code : CIUB0000320 

Phonepay : 9786646401

Gpay – 9786646401

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *