திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருவானைக்காவல் செக்போஸ்ட் பகுதியை சேர்ந்த சாமியம்மாள் என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச்சங்கிலி, மேல கொண்டையன் பேட்டை பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரிடம் 3 பவுன் தங்கச்சங்கிலி,
கள்ளக்குறிச்சி அருகே உள்ள சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் என்பவர் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலி, சமயபுரம் அருகே பழூர் பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரிடம் 3 பவுன் தங்கச்சங்கிலி, சமயபுரம் காமராஜர் தெருவை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவரிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி, திருப்பஞ்சலி அருகேயுள்ள வால் மால் பாளையம் தெருவைச் சேர்ந்த சத்யா என்பவரிடம் 2 பவுன் தங்கச்சங்கிலி
மேலும் இரண்டு பெண்களின் தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிச் சென்றனர். இதேபோல் பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் செல்போன்கள் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தங்க நகைகளை பறி கொடுத்தவர்கள் தனித்தனியாக சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO
Comments