திருச்சி மாவட்டம் லால்குடியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்சி மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்பையா உத்தரவின்பேரில் லால்குடி வட்ட வழங்கல் அலுவலர் வருவாய் ஆய்வாளர் இளவரசி ஆகியோர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது லால்குடி மேல வீதியில் ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த லாரியில் இருந்த 515 மூட்டை ரேஷன் அரிசியையும் 50 கிலோ கோதுமை, 17,200 கிலோ குருணை மாவு ஆகியவை இருப்பது தெரியவந்தது.
இதனை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், லால்குடி மேலே வீதியைச் சேர்ந்த கீர்த்திவாசன் என்பவர் ரேஷன் அரிசியை வாங்கி அவருக்கு சொந்தமான அரவையில் அரைத்து மாவாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கீர்த்திவாசனையும், தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO
Comments