தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41ன் படி திருச்சி மாநகரில் பொது அமைதி மற்றும் பொது பாதுகாப்பு கருதி அரசியல் கட்சியினர் மற்றும் இதர அமைப்பினர் ஊர்வலம், பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த கட்டுப்பாடுகளை விதித்து மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி ஆர்ப்பாட்டம், ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதாக இருந்தால் ஐந்து நாட்களுக்கு முன்பே முறைப்படி அனுமதி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த கட்டுப்பாடுகள் நேற்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
இந்தக் கட்டுப்பாடுகள் வருகிற மே மாதம் 12ஆம் தேதி மாலை 6 மணி வரை 15 நாட்கள் அமலில் இருக்கும் என்றும் அதே வேளையில் மதம் மற்றும் ஊர்வலங்களை இந்த உத்தரவு கட்டுப்படுத்தாத எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO
Comments