Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

ஸ்ரீரங்கம் தேரோட்டத்தையொட்டி நாளை (29.04.2022) திருச்சியில் போக்குவரத்து மாற்றம்

திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு நாளை(29.04.2022) பக்தர்கள் வசதிக்காக மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி,சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் நகரப்பேருந்துகள் அனைத்தும் அண்ணாசிலை, ஓடத்துறை மேம்பாலம், ஓயாமாரி ரோடு, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை. Y ரோடு சந்திப்பு, காவல் சோதனை சாவடி எண் – 6, டிரங்க்ரோடு. திருவானைக்கோவில் சந்திப்பு, காந்தி ரோடு, JAC கார்னர், ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் அடைந்து பயணிகளை இறக்கி, ஏற்றி பின்னர் அம்மா மண்டபம் ரோடு. மாம்பழச்சாலை, காவேரி பாலம் அண்ணாசிலை வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வரவேண்டும்.

2. வெளியூரிலிருந்து கோவிலுக்கு வகும் அனைத்து பக்தர்களின் கார்களும், மூலத்தோப்பு, தெப்பக்குளம் மற்றும் நெடுந்தெரு மந்தைகளில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி கோவிலுக்கு செல்ல வேண்டும், பின்பு மேலவாசல், நெப்பக்குளம் மற்றும் நெடுந்தெரு மந்தை வாகன நிறுத்திருந்து வெளியே செல்லும் அனைத்து வாகனங்களும் மேலூர் சாலை தசாவதார ஆர்ச், பஞ்சக்கரை ரோடு வழியாக வெளியே செல்ல வேண்டும்.

3. வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் பேருந்துகள் அனைத்தூம் நெல்சன் ரோட்டில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலைகல்லூரி விளையாட்டு மைதானம் மற்றும் பஞ்சக்கரையில் உள்ள

வாகனம் நிறுத்தமிடத்தில் நிறுத்த வேண்டும். 4. லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லுர் மற்றும் வாத்தலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அனைத்து நகர பேருந்துகளும் அண்ணாசிலை, ஓடத்துறை மேம்பாலம், ஓயாமாரி ரோடு, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை, Y ரோடு சந்திப்பு, புதிய கொள்ளிடம் பாலம் வழியாக சென்று, திரும்பி வரும்போது புதியகொள்ளிடம் பாலம், காவல் சோதனை சாவடி எண் CP-6, டிரங்க் ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு, JAC கார்னர் வழியாக ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் (OLD BUS STAND) வந்து பயணிகளை இறக்கியும், ஏற்றியும் பின்னர் அம்மா மண்டபம் ரோடு, மாம்பழச்சாலை, காவேரி பாலம் அண்ணாசிலை வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வரவேண்டும்.

5.சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புரநகர் மற்றும் வெளியூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் ஓடத்துறை மேம்பாலம், ஓயாமாரி ரோடு, தேசிய நெடுஞ்சாலை, “y” ரோடு வழியாக சென்று மீண்டும் கொள்ளிடம் பாலம், கொண்டையாம்பேட்டை, காவேரி பாலம், சஞ்சீவி நகர், ஓயாமாரி வழியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *