Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாநகரில் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கான கோடை கால சிறப்பு முகாம் 

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபில் 
கிளப்பை கடந்த 31.12.2021-ந்தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

திருச்சி மாநகர ரைபில் கிளப்பில் மொத்தம் 215 நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களும் உள்ளனர். மேற்படி ரைபிள் கிளப்பில் 50 மீட்டர் தூரத்தில் ஒரு சுடு தளமும், 25 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளமும், 10 மீட்டர் தூரத்தில் மூன்று சுடுதளம் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஒன்று உள்ளது. இக்கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளுக்கு Air Rifle பயிற்சிக்கான கோடை கால சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இக்கோடை கால முகாமில் 12 வயது முதல் 17 வயது வரையிலான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான முதல் பேட்ச் 01.05.2022 முதல் 15.05.2022 வரையிலும், இரண்டாவது பேட்ச் 15.05.2022 முதல் 31.05.2022 வரையிலும் நடைபெறகிறது. இம்முகாமானது தமிழ்நாட்டின் சிறந்த நிபுணர்களை கொண்டு பயிற்சி வழங்கப்படுகிறது.

மேலும் திருச்சி மாநகரில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் இக்கோடை கால முகாமை பயன்படுத்தி துப்பாக்கி சுடுவதில் தங்களது திறனை வளர்த்து நிபுணத்துவத்தை பெற திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இம்முகாம் தொடர்பான பதிவு மற்றும் அனைத்து தகவல்களுக்கு திருச்சி ரைபிள் கிளப் தொலைப்பேசி எண் 9843370804 என்ற எண்ணிற்க்கு தொடர்புக் கொள்ளுமாறும், இம்முகாமிற்கு குறைவான இடங்களே உள்ள நிலையில் முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும்
தெரிவித்துக்கொள்ளபடுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *