திருச்சி மாநகராட்சி மண்டலம் 5-த்திற்க்குட்பட்ட 43 வது வார்டு திருவள்ளுவர் நகர் மாரியம்மன் கோயில் அருகில் மின்சார உயர் மீது தென்னை மரம் மட்டை சாய்ந்து உள்ளது.
இருக்கிறது பலமுறை மாநகராட்சிக்கும், மின்சார வாரியத்திற்கும் தகவல் தெரிவித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து கடந்த 30-ஆம் தேதி திருச்சி விஷன் செய்தி வெளியிட்டது இதனை அறிந்த அந்த வார்டு கவுன்சிலர் உடனடியாக மின்சார கம்பிகள் மீது சாய்ந்து இருந்த தென்னை மரக் கிளைகளை பணியாளர்களை கொண்டு உடனடியாக அகற்றி உள்ளார்.
பொதுமக்கள் கோரிக்கையை மாநகராட்சி மற்றும் மின்சார வாரியத்திற்கு பலமுறை புகார் தெரிவித்து இருந்தோம் எந்தவித நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை குறித்து திருச்சி விஷன் செய்தி வெளியிட்டதை அடுத்து 24 மணி நேரத்திற்குள் உடனடியாக நடவடிக்கை எடுத்த கவுன்சில் செந்திலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO
Comments