Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

கல்வி விடுதிகளில் பகுதிநேர தூய்மைப்பணியாளர் பணியிடங்கள் அறிவிப்பு

திருச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், இத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மைப்பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.

மேற்கண்ட பகுதிநேர தூய்மைப்பணியாளர் (ஆண் & பெண்) காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலம், இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக பின்வரும் தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும், வயது வரம்பு: 1.7.2022 தேதியில் SC/ST – 18 முதல் 35, BC, BCM, MBC & DNC – 18 முதல் 32, இதர பிரிவினர் 18 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மேற்படி தகுதிகளுடன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள விடுதிகளில் பகுதிநேர 
தூய்மைப்பணியாளர் (தொகுப்பூதியம்) பணி புரிய விருப்பம் உள்ளவர்கள், கீழ் உள்ள மாதிரி விண்ணப்ப படிவம் போன்று தயார் செய்து அதனை பூர்த்தி செய்தும், உரிய சான்றுகளின் நகல் இணைத்தும், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி அதனை சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் 30.05.2022 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக. இருந்து, அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் மீது அரசு பரிசீலிக்காது எனவும் மனுதாரரே முழுப்பொறுப்பு எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மனுதாரர்களை மேற்கண்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பம் செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், பகுதிநேர தூய்மைப்பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *