திருச்சி, உறையூர் பாண்டமங்கலம் காவல்காரன் தெருவை சேர்ந்த செல்வராஜ் இவரது மருதகணேஷ் (20). திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் பி.காம் மூன்றாமாண்டு படித்து வந்தார்.
கடந்த 15ம்தேதி இத்துறை 3ம் ஆண்டு படிக்கும் 25 மாணவர்கள், 15 மாணவிகள். என மொத்தம் 40 நபர்கள் கல்விச் சுற்றுலாவாக கேரளா மாநிலம், கொச்சின் சென்றுள்ளனர். சுற்றுலா சென்ற மாணவ – மாணவிகள் கடற்கரையில் நேற்று குளித்து கொண்டிருக்கும் போது மருதகணேஷ் எதிர்பாராதவிதமாக அலையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இது குறித்த தகவல் அறிந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொச்சியில் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் மாணவர் மருதகணேஷ் உடல் திருச்சிக்கு கொண்டுவரப்பட உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO
Comments