தமிழ்நாடு மாநில அளவிலான 96வது சாம்பியன்ஷிப் தடகள போட்டி சமீபத்தில் கோவையில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். திருச்சி தேசியக் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளனர்.
முதுகலை யோகா துறையை சேர்ந்த மாணவிகள் சுவாதி4×400 தொடர் ஓட்டத்தில் முதல் பரிசையும், தேஜஸ்வினி 500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடத்தையும், ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடத்தையும் வென்றுள்ளனர். இளங்கலை உடற்கல்வி துறை மாணவி ஷோபனாதேவி நீளம் தாண்டுதலில் மூன்றாம் இடத்தை வென்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி செயலர் ரகுநாதன், கல்லூரி முதல்வர் சுந்தரராமன் மற்றும் உடற்கல்வித்துறை தலைவரும், தேசிய கல்லூரி துணை முதல்வருமான பிரசன்ன பாலாஜி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments