திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் பாகனூர் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு பாகனூர் என்ற கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை இன்று 18.05.2022 ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் இணைந்து திறந்து வைத்தனர்.

இவ்விழாவில் மணிகண்டம் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர் துணைத்தலைவர் வார்டு உறுப்பினர்கள் அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

முக்கிய நிகழ்வாக இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் உரையாற்றும்போது ஊராட்சிக்கு தேவையான வளர்ச்சி பணிகளை உடனடியாக செய்து தருகிறேன் என்று கூறினார். மக்கள் போக்குவரத்து ஏற்பாடு செய்து தரும்படி மனுக்கள் அளித்தனர் அந்த மனுவை உடனடியாக பெற்றுக் கொண்டு ஊராட்சி மன்ற தலைவரை அழைத்துக் கொண்டு உடனடியாக போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்று பேருந்து வசதி செய்து தரும்படி தெரிவித்தார்கள்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
13 Jun, 2025
311
19 May, 2022










Comments