Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

வண்டல் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது… திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினரின் கட்டுப்பாட்டிலுள்ள நீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், சவுடு மண், களிமண் போன்ற சிறுவகைக் கனிமங்களை விவசாயிகள் தங்கள் வயல்களில் பயன்படுத்தவும்.

பொதுமக்களின் சொந்தப் பயன்பாட்டிற்கும், மண்பாண்டத் தொழில் செய்வோர் பயனடைய அனுமதி வழங்குதல் தொடர்பான விண்ணப்பம் கோரும் அறிவிக்கை திருச்சிராப்பள்ளி, மாவட்ட அரசிதழ் எண்.11 (சிறப்பு வெளியீடு) நாள் : 30.04.2022ன் படி பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 30 குளங்களுக்கும். பொதுப்பணித்துறை அரியாறு கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 83 குளங்களுக்கும் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 95 குளங்களுக்கும் ஆக கூடுதல் 208 ஏரி /குளங்களிலிருந்து வண்டல் மண் / சவுடு மணி / களிமண் இலவசமாக வெட்டி எடுத்துச் செல்ல விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித்தலைவரால் வரவேற்கப்படுகிறது.

அதன்படி, 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 30-ன்கீழ் பதிவு செய்யப்பட்ட மண்பாண்ட தொழிலாளர் / பொது மக்கள் சொந்த தேவைக்கு மற்றும் விவசாயிகளின் விவசாய தேவைக்கு களிமண் / வண்டல் மண் / சவுடு மற்றும் கிராவல் ஆகியவற்றை தூர்வாரும் நோக்கில் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள ஏரி / குளம் மற்றும் குட்டை ஆகிய பகுதிகளிலிருந்து விவசாய தேவைக்கு வண்டல் மண் / களி மண் நன்செய் நிலத்திற்கு 1 ஒக்கருக்கு 75 கனமீட்டர் (25 டிராக்டர்) 1 ஹெக்டேருக்கு 185 கனமீட்டர். புன்செய் நிலத்திற்கு 1 ஏக்கருக்கு 90 கனமீட்டர் (30 டிராக்டர்) 1 ஹெக்டேருக்கு 222 கனமீட்டர் மற்றும் இதர சொந்த பயன்பாட்டிற்கு மண்/ சடு / கிராவல் ஆகியவை 30 கனமீட்டர் (10 டிராக்டர்) மற்றும் மண் பாண்டங்கள் செய்பவர்களுக்கு 60 கனமீட்டர் (20 டிராக்டர்) ஆகியவை கட்டணமின்றி

மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று எடுத்து செல்ல 20 நாட்களுக்கு மிகாமல் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படும். விண்ணப்பதாரரின் இருப்பிடம் அல்லது அவரது விவசாய நிலம் அதே வருவாய் கிராமங்களில் அமைத்திருக்க வேண்டும். சிட்டா மற்றும் அடங்கல் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மண்பாண்டங்கள் செய்வதற்கான களி மண் எடுக்க சம்பந்தப்பட்ட மண்பாண்டத் தொழிலாளர் சங்கம் அல்லது கிராம நிர்வாக அதிகாரியின் சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விவசாயிகள்/பயனாளிகள்/ விவசாய கூட்டமைப்புகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் ஏரி / குளம் / குட்டைகளில் உள்ள கனிமத்தினை பகுப்பாய்வு செய்து மண்பரிசோதனை அறிக்கையை பெற வேண்டும். அனுமதி பெற்ற பயனாளிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட ஆட்சித்தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரி ஒப்பந்த பத்திரம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *