திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபில் கிளப்பை கடந்த 31.12.2021-ந்தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
திருச்சி மாநகர ரைபில் கிளப்பில் மொத்தம் 215 நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களும் உள்ளனர். மேற்படி ரைபிள் கிளப்பில் 50 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளமும், 25 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளமும், 10 மீட்டர் தூரத்தில் மூன்று சுடுதளம் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஒன்று உள்ளது. இக்கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளுக்கு Air Rifle பயிற்சிக்கான கோடை கால சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இக்கோடை கால முகாமில் 12 வயது முதல் 17 வயது வரையிலான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள். இப்பயிற்சிக்கான இரண்டாவது பேட்ச் 15.05.2022 முதல் நடைபெற்ற வந்தது. இரண்டாவது பேட்சில் 10 மீட்டர் Air Rifle போட்டியில் மொத்தம் 90 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள். அதில் மாணவி நிறைமொழி முதல் இடத்தையும், மாணவி கண்பத்தர்ஷனா இரண்டாவது இடத்தையும், மாணவன் அஸ்வந்த் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் இன்று 29.05.22ந்தேதி பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் திருச்சி மாநகர ரைபில் கிளப்பில் செயலாளர் செந்தூர்செல்வன் கலந்து கொண்டார்
மேலும் திருச்சி மாநகரில் ரைபிள் கிளப்பின் அனைத்து தகவல்களுக்கும் திருச்சி ரைபிள் கிளப் தொலைப்பேசி எண் 98433-70804 என்ற எண்ணிற்க்கு தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO
Comments