திருச்சிராப்பள்ளி மாவட்ட பேக்கரி மற்றும் ஸ்வீட் தயாரிப்பாளர்களுக்கான முதலமைச்சர் சட்டமன்ற அறிவிப்பின்படி சற்றே குறைப்போம், லேபிளில் இருக்க வேண்டியது மற்றும் FOSTAC பயிற்சி நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் குறைந்த சர்க்கரை, குறைந்த உப்பு, குறைந்த கொழுப்பு குறைந்த அளவில் உண்ண வேண்டும் என்றும், பேக்கரி மற்றும் ஸ்வீட் உணவுகளை விற்பனை செய்பவர்கள் கெட்டுப்போன காலாவதியான உணவு பொருளையோ, அதிக நிறமி கலந்த இனிப்பு வகைகளையோ விற்பனை செய்யக்கூடாது என்றும் பொதுமக்களும் இனிப்பு வாங்கும் போது பார்த்து வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் President வைத்தியலிங்கம், Vice president ஆனந்த் பாபு மற்றும் Secretary கமல் ஆகியோர் முன்னிலையில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டினை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செய்திருந்தனர். இந்த கூட்டத்தில் சுமார் 80 வணிகர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மேலும், மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில் பொதுமக்களும் தங்கள் பகுதிகளில் ஏதேனும் கலப்படம் கண்டறிந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
தொலைபேசி எண் : 99 44 95 95 95,
95 85 95 95 95
மாநில புகார் எண் : 94 44 04 23 22
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO
Comments