22 ஊராட்சிகளில் குப்பை கிடங்கு அமைக்க வேண்டும். வறட்சியான பயன்படாத நிலத்தில் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 21 ஊராட்சிகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
இந்நிலையில் திருச்சி புங்கனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட அரசுக்கு சொந்தமான ஏழு ஏக்கர் நிலத்தில் விவசாய பணிகள் 60 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
அதில் குப்பை கிடங்கை தேர்வு செய்து தலைவர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 60 வருடங்களாக ஏழு ஏக்கர் நிலத்தில் விவசாய பணிகள் ஈடுபட்டு வருவதாக சுமதி என்பவர் குறிப்பிட் டார் வேண்டும் என்று எங்களை பழிவாங்கும் நோக்கில் ஊராட்சித் தலைவர் தாமோதரன் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு எங்களைத் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்தார்.குப்பை கிடங்கு அமைப்பதற்கு 200 அடி சாலை அமைத்து மற்ற நிலங்களை தாண்டி அவருடைய நிலத்திற்கு சென்று அந்த குப்பை கிடங்கை அமைத்துள்ளதாகவும் அதற்காக எதிர்ப்பு தெரிவித்து இன்று விவசாயிகள் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Advertisement
இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபொழுது அதிமுக திமுக இடையே நடக்கும் தகராறு காரணமாக தலைவர் இவ்வாறு செயல்படுவதாக தெரிவித்தார்.சுற்றி விவசாய நிலங்கள் இருப்பதால் வேறு இடத்துக்கு குப்பை கிடங்கை மாற்றவும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து குப்பை கிடங்கிற்க்கு வெட்டப்பட்ட குழியையும் மூடும் பணியில் ஈடுபட்டனர்.
Comments