திருச்சி மாவட்டம் தாயனூரை சேர்ந்தவர் அக்காமாள் (65) .காலை 8 மணியளவில் மூதாட்டி தோட்டத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்ததார். அவர் அணிந்திருந்த, 4 சவரன் செயின், தோடு, மூக்குத்திகளை மர்மநபர்கள் பறித்துளள்ளனர். மூதாட்டி தடுக்க முயன்ற போது மூக்கு,காது கத்தியால் வெட்டியுள்ளனர்.
அடையாளம் தெரிய கூடாது என்பதற்க்காக பின்னர் கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டு தப்பி ஓடினர். தகவலறிந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி சுஜித்குமார் சம்பவ இடத்தில் விசாரணை செய்தார்.
மேலும் ஜீயபுரம் காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் பரவாசுதேவன், சோமரசம்பேட்டை ஆய்வாளர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சோமரசன்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து குற்றவாளிகளை தேடிவருகிறார்கள்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO
Comments