நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 56 ஆவது வார்டு கருமண்டபம் புதுத்தெரு, மாந்தோப்பு, தெற்குத் தெரு பகுதியில் வசிக்கின்ற மக்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி குறைகள் கேட்டறிந்தார்.
இப்பகுதி மக்கள் தாங்கள் இப்பகுதியில் நீண்ட நாட்களாக குடியிருந்து வருவதாகவும், இதற்காக உரிய வரியினை குடியிருப்புவாசிகள் செலுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு உதவிட வேண்டி, நகராட்சி நிர்வாகத்துறை அவர்களுக்கு கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் மாநகராட்சி ஆணையர் ஆர். வைத்திநாதன், மாமன்ற உறுப்பினர்கள் பா .மஞ்சுளாதேவி, வெ. ராமதாஸ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments