பக்தி பரவசத்துடன் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக காலை யாகசாலை பூஜைகள் நடைபெற்று சுவாமி புறப்பாடாகி தேரில் வீற்றிருந்தார். மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் ஆட்டத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
43 ஆண்டுகளாக தேர் பழுதடைந்து இருந்த காரணமாக தேர்த்திருவிழா தடைபட்டது. தற்போது தேரை புதுப்பித்து புதுப்பொலிவுடன் கடந்த 1979 ஆம் ஆண்டுக்குப் பிறகு இன்று தான் தேர்த்திருவிழா நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO
Comments