Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

புதியதாக பணியில் சேர்ந்த கால்நடை உதவி மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் புத்தாக்க பயிற்சி

தமிழக அரசு துறைகளில் கால்நடை பராமரிப்புத்துறை 130 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மிகவும் தொண்மையான துறையாகும். தமிழக கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதில் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாகத் நிகழ்கிறது.

20 ஆவது கால்நடை கணக்கெடுப்பின் படி தமிழகத்தல் 1 கோடி பசுவினங்களும். 5 இலட்சம் எருமையினங்களும், 1.43 கோடி செம்மறி மற்றும் வெள்ளாட்டினங்களும், மருத்துவ சேவையை இலவசமாக வழங்கி கிராமிய பொருளாதாரத்தை பெருக்குவதில் கால்நடை பராமரிப்புத்துறை மிகச்சிறந்த பங்களிப்பைச் செய்து வருகிறது.

தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களான விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் விலையில்லா நாட்டுக் கோழிகன் கிராமப்புற ஏழை மகளிருக்கு வழங்குவதன் மூலம் அவர்களை தொழில் முனைவோராக மாற்றி கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கிராமிய பொருளாதாரத்தை உயர்த்தவும் பெரும் பங்காற்றி வருகிறது. தமிழக வேளாண் மொத்த உற்பத்தியில் கால்நடை வளர்ப்பு சுமார் 41% பங்களிப்பை வழங்குகிறது. 

தமிழக கால்நடை பராமரிப்புத்துறையில் தற்போது 3030 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களில் 1141 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் பல்வேறு நீதிமன்ற வழக்குகளால் கடந்த பத்தாண்டுகளாக நிரப்பபடாமல் இருந்த நிலையில் தமிழக முதல்வர் வழிகாட்டுதலாலும், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அவர்களின் தொடர் முயற்சியாலும் அனைத்து சட்ட சிக்கல்களும் தீர்க்கப்பட்டு, நீதிமன்ற ஆணை பெறப்பட்டு 1089 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் புதிதாக பணியில் சேர்ந்த கால்நடை உதவி மருத்துவர்களை ஊக்கப்படுத்தி துறையின் செயல்பாடுகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கும் புத்தாக்க பயிற்சி மதிப்பிற்குரிய காலநடை பராமரிப்புத்துறை, அரசு கூடுதல் தலைமை செயலாளர் அவர்களின் வழிகாட்டுதல் படி நடைபெற்று வருகிறது. இதில் 23.06.2022 நேற்று திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 136 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. 

இந்த விழாவில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மதிப்பிற்குரிய தென்காசி சு.ஜவஹர். அவர்கள் கலந்து கொண்டு புதிதாக பணியில் சேர்ந்த கால்நடை உதவி மருத்துவர்களை ஊக்கப்படுத்தி வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரை வழங்கி தலைமையுரை ஆற்றினார்.

இப்பயிற்சியில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை திருச்சிராப்பள்ளி, கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் அவர்கள்செய்திருந்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *