Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

வேன் பீஸ் கட்டாத பள்ளி மாணவனுக்கு டீசி

திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளூர் சாலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு சித்தீஷ்வரன் என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். மாணவன் சித்தீஸ்வரன் முசிறியில் இயங்கும் அமலா மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2ம் வகுப் படித்து வருகிறான். தினசரி பள்ளி நிர்வாகத்தால் இயக்கப்படும் வேன் மூலம் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு செல்வதற்காக நிறுத்தத்தில் வந்து சித்தீஸ்வரன் அவரது தாயுடன் நின்றுள்ளார். ஆனால் வேனில் இருந்த உதவியாளர் பரமசிவம் என்பவர் சிறுவனை வேனில் பள்ளிக்கு அழைத்துச் செல்ல முடியாது. 400 ரூபாய் வேன் பீஸ் பெண்டிங் உள்ளது என கூறியுள்ளார். தாய் கலைச்செல்வி நான் 11 மணிக்கு பள்ளிக்கு நேரில்  வந்து கட்டி விடுகிறேன் என கூறியும் கேட்காமல் வேனை  எடுத்துச் சென்றுள்ளனர் இதைக்கண்ட கலைச்செல்வியின் உறவினர்கள் பைக்கில் சென்று வேனை நிறுத்தி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வேன் உதவியாளர் பரமசிவம் மாணவன் சதீஸ்வரன் வேனில் ஏற்றி பள்ளி அழைத்து வந்துள்ளார். சற்று நேரத்தில் பள்ளியில் இருந்து மாணவன் சுத்தீஸ்வரனின் தாய் கலைச்செல்வியை பள்ளிக்கு நேரில் வருமாறு அமலா மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகம் அழைத்துள்ளது. இதையடுத்து பள்ளிக்கு வந்த கலைச்செல்வியிடம் பள்ளி வேனை எதற்காக தடுத்து நிறுத்தினீர்கள் என கேட்டு மாணவனின் டிசியை கொடுத்துள்ளனர்.

டிசியை  வாங்க மறுத்த பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பெற்றோர்  டிசியை  மீண்டும்  பள்ளி நிர்வாகிகளும் கொடுக்க அவர்கள் டிசியை கீழே வீசி எறிய, மாணவன் ஒருபுறம் பரிதவித்து நிற்க என அங்கு பெரும் கலோபரம் ஏற்பட்டுள்ளது. முடிவில் மாணவனின் பெற்றோர்கள் தாங்கள் டீசியை பெற்றுக் கொள்வதாகவும் மாணவனுக்கு இந்த கல்வியாண்டிற்கு கட்டிய ரூபாய் 7500 பணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். அந்த பணத்தை திரும்ப தர முடியாது என பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவனின் பெற்றோர்கள் முசிறி போலீஸ் டிஎஸ்பி அருள்மணி,முசிரி கல்வி மாவட்ட அலுவலர்  பாரதி விவேகானந்தன் ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

சம்பவம்  குறித்து போலீஸ் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பீஸ் கட்டாத மாணவனை பள்ளி வேனில் ஏற்ற மறுத்து டிசி வழங்கிய பள்ளி நிர்வாகத்தின் செயல் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் முசிறியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி வளாகத்தில் எடுக்கப்பட்ட காணொளி காட்சி வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…… https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *