திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்த 14 மாற்று திறனாளிகள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் நாளை 4 ம் தேதி மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான இயக்கம் சங்கம் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் இருந்து 140 மாற்றுத்திறனாளிகள் வேன், பஸ் போன்ற வாகனங்களில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணி அளவில் திண்டுக்கல் நிலக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டனர் .
அப்போது 20 பேர் மாற்றுத்திறனாளிகள் பயணித்த வேன் சமயபுரம் சுங்க சாவடி அருகே கரியமாணிக்கம் பிரிவு சாலையில் முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதியது. இதில் வேன் ஓட்டுநர் மற்றும் வேனில் பயணம் செய்த 14 மாற்றுத் திறனாளிகளும், படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த அனைவரையும் ஆம்புலன்ஸ் வாகனம் உதவியுடன் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments