திருச்சி சரக காவல்துறை பணியிடை பயிற்சி மையத்தில் கடந்த 23.06.2022 முதல் 3.07.2022 வரை 6 வார காலத்திற்கு உதவி ஆய்வாளர்கள் 18 நபர்களுக்கு பதவி உயர்வுக்கு வழங்கப்பட்டு உள்ளது. முன்னதாக வழங்கப்படும் பயிற்சிகள் தொடர்பாக சட்ட வழக்குகள் குறித்து திருச்சி கி.ஆ.பெ மருத்துவமனை சட்ட மருத்துவ பேராசிரியர்கள், திருச்சி அரசு சட்டக் கல்லூரி பேராசிரியர்கள்,
அரசு வழக்கறிஞர்கள், தடய அறிவியல் & சைபர் கிரைம் நிபுணர்கள், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் கொண்டு கடந்த 6 வார காலத்தில் புதிதாக அமல்அமல்படுத்தபட்ட சட்டங்கள் குறித்தும், புத்தாக்க பயிற்சிகள் மற்றும் நவீன கால புலன் விசாரணை குறித்தும் பயிற்சி வகுப்புகள் திருச்சி பணியிடை பயிற்சி மையத்தில் வழங்கப்பட்டு பயிற்சிகள் நிறைவு பெற்றது.
இதில் 6 வார கால பயிற்சி முடித்த காவல் ஆய்வாளர்களை திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டி அறிவுரை வழங்கினார். அப்போது பணியிடை பயிற்சி மைய காவல் துணை கண்காணிப்பாளர் மயில்சாமி உடனிருந்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments