Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி உணவு பாதுகாப்பு துறை சார்பில் முகநூல் குழுமம்

திருச்சிராப்பள்ளி, உணவு பாதுகாப்பு துறை சார்பாக Eat Right Tiruchirappalli Facebook Group (முகநூல் குழுமம்)  மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் இன்று தொடங்கி வைத்தார். இந்த முகநூல் குழுமத்தில் உணவு பாதுகாப்பு துறையின் அனைத்து செயல்பாடுகளும் நாள்தோறும் பதிவேற்றம் செய்யப்படும்.

மேலும் இந்த முகநூல் குழுமத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொட்ளுவதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த குழுமத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அனைவரும் இந்த முகநூல் குழுமத்தில் உணவு பாதுகாப்பு துறையின் செயல்பாடுகளை பின்பற்றுபவர்களாகவும் (Follower) மற்றும் விரும்புபவராகவும் (Like) இணைந்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதனை தொடர்ந்து மாவட்டத்தில் அருள்மிகு கன்னி மாரியம்மன் கோவில், வீரப்பூர், அருள்மிகு விஸ்வநாத சுவாமி கோவில் மற்றும் அருள்மிகு தாருகவனனேஸ்வரர் கோயில் திருப்பராய்துறை ஆகிய மூன்று கோயில்களுக்கு BHOG (Blissful Hygienic Offering to God) சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் உணவகத்தில் பணி புரியும் 134 பணியாளர்களுக்கு மற்றும் இனிப்பகத்தில் பணிபுரியும் 84 பணியாளர்களுக்கு FOSTAC சான்றிதழ்களும் உயர் திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் உணவு உரிமையாளர் சங்க தலைவர் பொருளாளர் இராமானுஜம் அவர்களிடமும், இனிப்பக சங்க தலைவர் திரு.வையத்தியநாதன் அவர்களிடமும் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மாவட்ட நியமன அலுவலர் Dr.R.ரமேஷ்பாபு, தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் E.வசந்தன், D.ரெங்கநாதன், R.அன்புச்செல்வன், L.ஸ்டாலின், N.பாண்டி, செல்வராஜ், வடிவேல் மற்றும் T.சையது இப்ராஹிம் ஆகியோர் செய்திருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *