திருச்சி மத்திய சிறைச்சாலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், இன்று (8.7.22) கைதிகளிடம் கலந்துரையாடி அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் மற்றும் அவர்கள் படிக்கும் படிப்பு குறித்து கேட்டறிந்தும், சிறைச்சாலைக்குத் தேவையான சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து சிறை அலுவலரிடம் கேட்டறிந்தும் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.அபிராமி, வருவாய் கோட்டாட்சியர் திரு.கோ.தவச்செல்வம மற்றும் சிறைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
திருச்சிராப்பள்ளி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் இன்று நேரில் பார்வையிட்டு முகாம் வாழ் மக்களுக்கு தேவையான வீட்டு வசதி சுகாதார வசதி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார் இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments