திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மிமீ சிதைந்து, உடலில் காயங்களுடன், அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சடலமாக கிடந்த பெண் திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள முருவத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி செல்வி என்பது தெரியவந்தது.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவர் இறந்துவிடவே தனது 3 பிள்ளைகளுடன் வசித்து வந்த செல்வி கடந்த சனிக்கிழமை அன்று உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று வருவதாக பிள்ளைகளிடம் கூறிவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் செல்வி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதல்கட்ட விசாரணையில் செல்வி கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டது தெரியவந்தது. கொலையாளிகளை பிடித்த பின்னரே முழு தகவல்களும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO
Comments