Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் முதன் முறையாக மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல்  போட்டிகள் – மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு

திருச்சி மாநகர கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி 
மாநகர ரைபில் கிளப் கடந்த 31.12.2021-ந் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

திருச்சி மாநகர ரைபில் கிளப்பில் மொத்தம் 215 நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களும் உள்ளனர். மேற்படி ரைபிள் கிளப்பில் 50 மீட்டர் தூரத்தில் ஒரு சுடு தளமும், 25 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளமும், 10 மீட்டர் தூரத்தில் மூன்று சுடுதளம் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஒன்று உள்ளது.

இக்கிளப்பில் வருகின்ற 24.07.2022 முதல் 31.07.2022 வரை தமிழ்நாடு மாநில அளவிலான 47வது துப்பாக்கி சுடும் போட்டிகள் – 2022 (Rifle and Pistol Events) திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபில் கிளப்பில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 1500 வீரர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பங்கேற்க உள்ளனர்.

இந்த போட்டி தொடர்பான அறிவிப்பை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மற்றும் ரைபிள் கிளப் தலைவர் வெளியிட்டார்கள். அப்போது திருச்சி ரைபிள்  கிளப் செயலாளர் செந்தூர்செல்வன் மற்றும் பொருளாளர் சிராஜீதின் ஆகியோர் உடனிருந்தனர்.

அத்துடன் துப்பாக்கி சுடும் போட்டிகள் மற்றும் அதற்கான தகுதிகள் பயிற்சிகள் மற்றும் மாநில, தேசிய சர்வதேச அளவிலான பல்வேறு போட்டிகள் குறித்த கையேடு ஒன்றும் போட்டிகள் நடைபெறும் சமயத்தில் வெளியிடப்படுவதாக அறிவித்தார்கள்.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 9092027373 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *