திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய , இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீதான குற்ற வழக்குகள் நிறைவடையும் வரை இங்கு அடைக்கப்பட்டு இருப்பார்கள். வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக இந்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு தங்க வைத்துள்ளனர்.
அங்குள்ள சந்தேகத்திற்கு இடமான சிலரிடம் தேசிய பாதுகாப்பு முகமை (NIA)அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலியான பாஸ்போர்ட் பயன்படுத்தி வெளிநாடு தப்ப முயற்சி செய்தவர்கள் சிறப்பு முகாமில் அதிகமாக உள்ளனர். அவர்கள் வேறு ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபட திட்டம் வைத்துள்ளனரா? அவர்களுக்கு போலி பாஸ்போர்ட் கிடைத்தது எப்படி என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சோதனைகள் 50க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர் சிறப்பு முகாமில் உள்ளவர்களின் உடைய அறைகள் அவர்களுடைய உடமைகள் அவர்கள் பயன்படுத்திய செல்போன் ஆகியவற்றை சோதனையிட்டு ஒவ்வொருவரிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY#
டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments