தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவுரையின்படி திருச்சி மாநகராட்சி சார்பில் மக்களை தேடி மாநகராட்சி குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் இறுதி புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது.
மக்களை தேடி மாநகராட்சி குறைதீர்க்கும் முகாம் வருகிற 27.07.2022 ஆம் தேதியன்று மண்டலம் எண் : 1 – ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
மண்டல அலுவலகத்தில் உட்பட்ட 13-வார்டு பகுதி பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக குறைதீர் முகாமில் கொடுத்து பயன்பெறலாம்.
எனவே அந்தந்த மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதி பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி குறைதீர்க்கும் முகாமில் அளித்து பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments