Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி தேசியக் கல்லூரியில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி தேதிய கல்லூரி, தேசிய மாணவர்ப்படை – விமான படை பிரிவும், திருச்சி சைபர் கிரைம் காவல் பிரிவும் இணைந்து நடத்தும் விழிப்புணர்வு முகாம் 28.07.2022 கிருஷ்ணமூர்த்தி அரங்கில் நடைபெற்றது.

 கல்லூரியின் முதல்வர் squadron Leader. டாக்டர் சுந்தர்ராமன் தலைமை ஏற்று வாழ்த்துரை வழங்கினார்.கல்லூரியின் விமானபடை அதிகாரி Flying Officer. டாக்டர். ரா. சுரேஷ் குமார் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு பேச்சாளர்களாக ,N.முரளி (உதவி ஆய்வாளர் (Technical) மற்றும் V.சங்கர்( Grade 1 PC)பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

N.முரளி மாணவர்களுக்கு ஆற்றிய உரையில் சைபர் கிரைம் ( Financial and Non financial ) குற்றங்களை பற்றி விளக்கினார்.சைபர்‌ கிரைம் ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணம் ( அறியாமை,ஆசை அன்பு) என்று கூறினார்..படிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் இணைய விளையாட்டுகளில் பணம் இழக்க ‌வேண்டாம் என்று அறிவுரை கூறினார்..

கடவுச்சொல்லை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி அவரது உரையை முடித்துக் கொண்டார்.அடுத்ததாக V சங்கர் மாணவர்களுக்கு வழங்கிய உரையில் இணையம் இன்றி அமையாது உலகு என்று தொடங்கி தகவல்களை எப்படி இணையத்தில் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

குற்றங்கள் ( பண பரிவதனை மற்றும் பிற) ஏற்பட்டால் 1930 என்ற எண்ணிற்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார் சைபர் கிரைம் official website WWW.cybercrime.gov.inஎன்று கூறி அவரது உரையை நிறைவு செய்தார்.

NCC விமான படையை சேர்ந்த cadet சாக்ஷிநிமற்றும் cadet ரித்திகா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *