திருச்சி – மதுரை ரோடு ஜீவா நகர் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் முகேஷ் குமார் (17). இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள சையது முதுஷா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாமல் திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்றுள்ளார்.
பின்னர் அவர் காந்தி படித்துறையில் பள்ளி புத்தகப் பையை வைத்துவிட்டு குளிக்க ஆற்றில் இறங்கியதாக கூறப்படுகிறது. அப்போது ஆற்றில் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்ததால் மாணவர் முகேஷ் ஆற்றுக்குள் இழுத்து செல்லப்பட்டார். இதை பார்த்த அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் கோட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையெடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த மாணவனின் பையில் இருந்து பெயர் விலாசம் எடுத்து அவரது வீட்டிற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த பெற்றோர் பல்வேறு பகுதிகளை தேடி பார்த்தனர். இதே போல் தீயணைப்பு வீரர்களும் மாணவர் தேடினர். ஆனால் மாணவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இரவு ஆகியதால் தேடும் பணிவு தோல்வி ஏற்பட்டது. மீண்டும் இன்று மாணவனை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments