Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

மீன் வளர்ப்பு தொழிலுக்கு அரசு மானியம்- ஆட்சியர் தகவல்

 அரசாணை எண் 60 கால்தடை பராமிரப்பு பால்வளம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்(மீன்-4(1)துறை நாள் 06:07.2022 (CSS) பிரதம மந்திரி மத்திய மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அலங்கார மீன்வளர்க்கும் திட்டத்தில் ஒரு அலகிற்கு சிறிய அளவிலான தொட்டிகள் அமைத்து அலங்கார மீன்வளர்ப்பிற்கு ஆகும் செலவினம் ஆனது ரூ 300000 (பொது பிரிவினருக்கு 40 சதவீதம் ரூ.120000) (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 60 சதவீதம் ரூ.110000) மானியமாக வழங்கப்படும் திட்டத்தின்படி தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மீன்வளர்ப்பினை ஊக்குவித்திட மானியம் வழங்குதல் திட்டம்செயல்படுத்தபடவுள்ளது.

ஒரு அலகிற்கு நடுத்தர அளவிலான தொட்டிகள் அமைத்து அலங்கார மீன்வளர்ப்பிற்கு ஆகும் செல்வீனம் ஆனது. ரூ.800000 (பொது பிரிவினருக்கு 40 சதவீதம் ரூ.320000) (ஆதி திராவிடர்/பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு 60 சதவீதம் ரூ.480000) மானியமாக வழங்கப்படும். திட்டத்தின்படி தமிழ்நாட்டில் மீன்வளர்ப்பினை ஊக்குவித்திட மானியம் வழங்குதல் திட்டம் செயல்படுத்தபடவுள்ளது.

ஒரு அலகிற்கு அலங்கார மீனவளர்ப்பு அங்காடி அமைக்க ஆகும் செலவீனம் ஆனதுரூ.1000000 (பொது பிரிவினருக்கு 40 சதவீதம் ரூ.400000) (ஆதி திராவிடர் / பழங்குடியினர் மற்றும்பெண்களுக்கு 60 சதவீதம் ரூ.600000) மானியமாக வழங்கப்படும் திட்டத்தின்படி தமிழ்நாட்டில்மீன்வளர்ப்பினை ஊக்குவித்திட மானியம் வழங்குதல் திட்டம் செயல்படுத்தபடவுள்ளது.

மேற்கண்ட மானியமானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் முதலில் வரும்

விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு

தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணர்க்க விரும்பும் பயனாளிகள் திருச்சி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணபங்களை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை 15.08.2002 க்குள் திருச்சிராப்பள்ளி மீனவளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில்அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அலுவலக முகவரி: உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம், எண்.4, காயிதே மில்லத் தெரு, காஜா நகர், மன்னார்புரம், திருச்சி 620 020, தொலைபேரி எண் 0431 2421173 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார். தெரிவித்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLan

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *