Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கொள்ளையர்கள் 5 பேர் கைது – 108 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி பேரூராட்சி, பெரிய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிச்சமுத்து மகன் கௌதம்பிரபு (வயது 27), பனமரத்துப்பட்டி தாலுகா, காந்தி நகர் 3வது தெருவை சேர்ந்த பூபதி மகன் ஹரிஹரன் (வயது 19), கொண்டாலம்பட்டி, அழகுநகரை சேர்ந்த சின்னத்தம்பி மகன் விஜயகுமார் (வயது 20), நாமக்கல் மாவட்டம், மாணிக்கம் பாளையம் தாலுக்கா, சேருகலை பகுதியை சேர்ந்த அப்புசாமி மகன் பாலமுருகன் (வயது 32) என்பதும், இவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் திருச்சி பிச்சாண்டார் கோவில் ரயில்நிலையம் அருகே இருக்கும் ஒரு வீட்டில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற தயார் நிலையில் இருந்தபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதுகுறித்து 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த கொள்ளை கும்பலை சேர்ந்த 5வது நபரான நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே காட்டூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் கனகராஜ் (வயது 33) என்பவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து 5 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொள்ளையடித்த சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் அளித்தனர். தகவலின் பேரில் அப்பகுதிகளுக்கு விரைந்த சென்ற தனிப்படை போலீசார் 108 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கௌதம்பிரபு, ஹரிஹரன், விஜயகுமார், பாலமுருகன் மற்றும் கனகராஜ் ஆகிய 5 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *