திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி நாட்டுநலப் பணித்திட்டத்தின் சார்பில் இந்தியத் திருநாட்டின் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா பேரணி நடத்தப்பட்டது. நிகழ்வில் 200ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
கல்லூரியின் செயலர் தந்தை அருள்பணி லூயிஸ் பிரிட்டோ தலைமையேற்றார், கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. நடராஜன் முன்னிலை வகித்தார். 75வது விடுதலைத் திருநாளை முன்னிட்டு 75 விடுதலைப் போராட்ட வீரர்களின் படங்களை ஏந்தி மாணவர்கள் பேரணி வந்தனர். நிகழ்வை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்.கி.சதிஷ் குமார் , ஒருங்கிணைத்தார்.
பேரணி நிறைவில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். இருபால் ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments