திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இயங்கி வரும் ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டார இயக்க மேலாண்மை அலகில் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு தாட்கோ மூலம் வழங்கப்பட்ட நிதியுதவி ரூ.5 லட்சத்தை விடுவிக்க கண்ணுடையாம்பட்டியில் 12 பேர் கொண்ட மலர் சுய உதவிக் குழுவினரிடம் வட்டார இயக்க மேலாளர் மல்லிகா ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத குழு தலைவி ராஜலெட்சுமி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார், புகாரின்பேரில் இன்று நிகழ்விடத்துக்கு சென்ற டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார், லஞ்சம் பணம் ரூ.12 ஆயிரத்தை ராஜலெட்சுமி, வட்டார இயக்க மேலாளர் மல்லிகா என்பவரிடம் கொடுத்தபோது மறைந்திருந்த போலீஸார் கையும் களவுமாக பிடித்து மல்லிகாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments