Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

போதை பொருள் இல்லாத கிராமம் – திருச்சியில் மாணவர்கள் உறுதிமொழி

உலக போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த செங்கரையூர் கிராமத்தில் உள்ள TELC உயர்நிலைப்பள்ளியில் உலக போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு போதைப்பொருள் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் தீமைகள், போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்காக லால்குடி காவல் நிலைய ஆய்வாளர் பிரபு மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதில்  போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் உடல் நல பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

இதனை தொடர்ந்து போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் பேரணியாக சென்றனர் அப்போது கிராமத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும் போதைப் பொருட்களை ஒழிப்பது குறித்து மாணவ மாணவிகள் கோஷம் எழுப்பினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் செங்கையூர் கிராமத்தை போதை இல்லாத கிராமமாக மாற்றுவோம் என மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பால் சாந்த கிரின், தலைமை ஆசிரியர் ஜோசப், செங்கையூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், பி டி ஏ உபத் தலைவர் ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *