திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய பகுதியில் (24.08.2022) இன்று காலை 08.00 மணிக்கு 5.500 கிலோ கஞ்சாவுடன் மலம்பட்டி ராம்ஜி நகர் சேர்வைகாரன் தெருவை சேர்ந்த கோபால் என்பவரை பிடித்து சிறப்பு தனிப்படை போலீசார் எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதேபோல் கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் எடமலைப்பட்டி புதூர் சர்மா காலனி தெருவை சேர்ந்த முகமது அசாருதீன் 2 .1/2 கிலோ கஞ்சாவுடன் விற்க இருந்த போது சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் கருணாகரன் பிடித்து கொண்டுவந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments