Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் தொகுதி-1, தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், வங்கி போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருச்சிராப்பள்ளி சார்பாக இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலை கழகத்துடன் இணைந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நேரடி மற்றும் இணையதளம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.   

இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவ/மாணவிகள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeR_DMFwEHGTww7GibzwF0W_BShNEx6T6a3fJ1faeSbpuTDIA/viewform?usp=sf_link  என்ற google form முகவரியில் இணைத்துக் கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும். 9499055902, 7010370567, 0431-2413510

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் தொகுதி-1 இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடம் மற்றும் நேரம்- நேரடி பயிற்சி வகுப்பு இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், பாரதிதாசன் சாலை, கண்டோன்மென்ட், திருச்சிராப்பள்ளி-1 என்ற முகவரியில் திங்கள் முதல் வெள்ளி வரை நேரடி பயிற்சி வகுப்பு காலை 10.30 முதல் 12.30 வரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடம் மற்றும் நேரம்- நேரடி பயிற்சி வகுப்பு இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், பாரதிதாசன் சாலை, கண்டோன்மென்ட், திருச்சிராப்பள்ளி-1 என்ற முகவரியில் திங்கள் முதல் வெள்ளி வரை நேரடி பயிற்சி வகுப்பு பிற்பகல் 02.00 முதல் 04.00 வரை நடைபெறுகிறது.

வங்கி போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: இலவச பயிற்சி வகுப்பு https://meet.google.com/jkm-zqwx-apxஎன்ற இணையதளத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 02.00 முதல் 04.00 வரை நடைபெறுகிறது.

நேரடி இலவச பயிற்சி வகுப்பு தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி என்ற முகவரியில் இக்கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவிகளுக்கும் முன்னாள் மாணவ / மாணவிகளுக்கும் இக்கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியளார் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை நேரடியாக பிற்பகல் 2.15 முதல் 4.15 வரை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு இக்கல்லூரி பணிநியமன ஒருங்கிணைப்பாளரை (பேராசிரியர்) தொடர்பு கொள்ளவும்.

நேரடி இலவச பயிற்சி வகுப்பு அரசு கலைக் கல்லூரி, துவாக்குடி, திருச்சிராப்பள்ளி என்ற முகவரியில் இக்கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவிகளுக்கும் முன்னாள் மாணவ / மாணவிகளுக்கும் இக்கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியளார் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை நேரடியாக முற்பகல் 11.00 முதல் பிற்பகல் 3.00 வரை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு இக்கல்லூரி பணிநியமன ஒருங்கிணைப்பாளரை (பேராசிரியர்) தொடர்பு கொள்ளவும்.

நேரடி இலவச பயிற்சி வகுப்பு அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முசிறி என்ற முகவரியில் இக்கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவிகளுக்கும் முன்னாள் மாணவ / மாணவிகளுக்கும் இக்கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியளார் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை நேரடியாக பிற்பகல் 02.00 முதல் 04.00 வரை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு இக்கல்லூரி பணிநியமன ஒருங்கிணைப்பாளரை (பேராசிரியர்) தொடர்பு கொள்ளவும்.

இணையதள இலவச பயிற்சி வகுப்பு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமுளுர் (லால்குடி) என்ற முகவரியில் இக்கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவிகளுக்கும் முன்னாள் மாணவ / மாணவிகளுக்கும் http://meet.google.com/abx-tvcw-tuaஎன்ற இணையதளம் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியளார் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 05.30 முதல் 07.30 வரை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு இக்கல்லூரி பணிநியமன ஒருங்கிணைப்பாளரை (பேராசிரியர்) தொடர்பு கொள்ளவும்.

இணையதள இலவச பயிற்சி வகுப்பு தஞ்சாவூரிலுள்ள குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி, சரபோஜி கல்லூரி, ஒரத்தநாடு உறுப்பு கல்லூரி, கும்பகோணம் மகளிர் கல்லூரி மற்றும் கும்பகோணம் அரசு கல்லூரி போன்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ / மாணவிகளுக்கும் முன்னாள் மாணவ / மாணவிகளுக்கும் http://meet.google.com/abx-tvcw-tuaஎன்ற இணையதளம் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியளார் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 05.30 முதல் 07.30 வரை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு அந்தந்த கல்லூரி பணிநியமன ஒருங்கிணைப்பாளரை (பேராசிரியர்) தொடர்பு கொள்ளவும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *