இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை கடந்த 01.08.2022 முதல் துவங்கி உள்ளது. மேற்படி திட்டத்தின் நோக்கம் என்பது வாக்காளர் பட்டியலினை 100% தூய்மையாக்கல், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனி தகவல்களை உறுதிபடுத்துதல் மற்றும் பாதுகாத்தல், ஒரு வாக்காளரின் விபரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விபரங்கள் இரு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்த்தல் போன்ற காரணங்களுக்காக வாக்காளர்களிடமிருந்து ஆதார் எண்ணைப் பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இத்திட்டத்தின்படி இணையவழிமுறையில் (Online) வாக்காளர்கள் தாங்களே நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் படிவம்-6Bஐ https://www.nvsp.in, https://votersportal.eci.gov.in ஆகிய இணையதளம் மூலமாகவும் Voters Helpline Mobile, GARUDA mobile App, போன்ற செயலி வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
இப்பணிக்காக சிறப்பு முகாம் நாளை 04.09.2022 (ஞாயிறு) அன்று நடத்தப்பட உள்ளது. இச்சிறப்பு முகாம் நாளில் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வாக்காளர்கள் படிவம் 6B-யை பூர்த்தி செய்து சமர்பிக்கலாம்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments