திருச்சி கருமண்டபம், RMS காலனி, அசோக்நகர், மேற்கு விஸ்தரிப்பில் வசித்து வருபவர் நாகலட்சுமி (57) இவரது தங்கை மகளுக்கு வரும் புதன்கிழமை 7-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாகலட்சுமி மற்றும் அவரது தாயார் இன்று காலை திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக இன்று காலை திருச்சி சின்னக்கடை வீதிக்கு வந்து விட்டு, இன்று மாலை வீடு திரும்பினர்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 பவுன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இதனையடுத்து நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டது. திருமணத்திற்கு இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் மணப்பெண்ணின் நகைகள் கொள்ளை போனது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து அப்பகுதிகளிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments