இன்று (14.09.2022) திருச்சிராப்பள்ளி மாவட்டம் உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக Food Fortification (உணவு செறிவூட்டல்) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு துறை திரு.டாக்டர்.R.ரமேஷ்பாபு, M.B.B.S.,அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருமதி.ஜெகதீஸ்வரி உணவு செறிவூட்டல் மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும் Food Fortification குறித்து செயல்முறை விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிகழ்வில் ஆவின் மார்க்கெட்டிங் மேனேஜர் மகேந்திரன், குழந்தைகள் வளர்ச்சி திட்டம் அலுவலர் காஞ்சனா மற்றும் பால், எண்ணெய் மற்றும் அரிசி தயாரிப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் உணவு செறிவூட்டல் செய்யப்பட்ட அரிசி மற்றும் சத்துமாவில் தயாரிக்கப்பட்ட 25-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை தயார் செய்து இக்கூட்டத்தில் காட்சிபடுத்தினர்.
இக்கூட்டத்தில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு கூறுகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தயார் செய்து விற்பனை செய்யப்படும் பால், அரிசி மற்றும் எண்ணெய் ஆகிய உணவு பொருள்கள்களை தயாரிப்பு செய்யும் பொழுது Fortified செய்து தான் விற்பனை செய்ய வேண்டும் எனவும், இதன் மூலம் பொது மக்கள் அனைவரும் ஊட்டசத்து குறைபாடு (Malnutrition) இல்லாமல் அனைத்து நுண்ணுயிர் சத்துகள் அடங்கிய உணவு மற்றும் பாதுகாப்பான உணவை உட்கொண்டு நல்ல ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்திற்கான ஏற்பாட்டினை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் T.சையத் இப்ராஹீம் .L.ஸ்டாலின்பிரபு, .E.வசந்தன், .A.பொன்ராஜ், .D.ரெங்கநாதன், K.ஷண்முகசுந்தரம் .T.மகாதேவன், .D.செல்வராஜ், .R.அன்புசெல்வன், .M.வடிவேல் மற்றும் .W.ஜஸ்டீன் அமல்ராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.
மேலும் கலப்பட உணவு சம்பந்தப்பட்ட உணவு புகார்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.உணவு கலப்பட புகாருக்கு 99 44 95 95 95 95 85 95 95 95
மாநில புகார் எண் 94 44 04 23 22
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….. https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…… https://t.co/nepIqeLanO
Comments