திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஹோட்டலில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையெடுத்து காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையில் போலீசார் அந்த ஹோட்டலில் அதிரடியாக பூந்த சோதனை நடத்தினர்.
அப்போது அந்த பணம் வைத்த சூதாடிய 9 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில்ர உறையூரைச் சேர்ந்த காளிமுத்து, தங்கவேல், செந்தில் மணி, பன்னீர்செல்வம், மணிகண்டன் உட்பட 9 பேர் என தெரிய வந்தது.
இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மூன்று சீட்டு கட்டு 59 ஆயிரத்து 330 ரூபாய் பறிமுதல் செய்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments