Thursday, August 21, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் யானை திடீர் மரணம்

திருச்சி எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு முகாமில் ஜமீலா சுமார் (62) வயது மதிக்கத்தக்க பெண் யானை  கடந்த இரண்டு ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு இருந்து வந்தது. இந்த யானை தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் உரிமைச் சான்று இன்றியும் வழித்தடச் சான்று இன்றியும் யானையின் உரிமையாளர் பணம் சம்பாதிக்கும் நோக்கில் பயன்படுத்தி வந்துள்ளார்.

மேற்படி யானை பல நாட்கள் நோய்வாய்ப்பட்டும். அதற்கு தக்க சரியான மருத்துவ சிகிச்சை செய்யாமலும் இருந்துள்ளதை மாவட்ட வளர்ப்பு யானைகள் பராமரிப்பு குழுவினர் கண்டறியப்பட்டு அதனை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் சென்னை அவர்களின் உத்தரவின்படி திருச்சி யானைகள் மறுவாழ்வு முகாமில் வைத்து பராமரிக்கவும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுருந்தார்.

அதன் தொடர்ச்சியாக மாவட்ட வன அலுவலரால் அமைக்கப்பட்ட பண கால்நடை மருத்துவ குழுவின் மருத்துவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நன்முறையில் பராமரிக்கப்பட்ட வந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவினால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று   யானை பாகங்களின் கட்டளைக்கு இணங்க மறுத்து யானை நிலை குலைந்து உட்கார்ந்து விட்டது.

இது குறித்து உடனடியாக திருச்சி கால்நடை மருத்துவமனை உதவி இயக்குனர் தலைமையிலான மருத்துவ குழு விரைந்து வந்து யானையை பரிசோதித்ததில் யானை உயிரிழந்து விட்டதை உறுதிப்படுத்தினர். மாவட்ட வன அலுவலர் தலைமையிலான வளர்ப்பு யானைகள் பராமரிப்பு குழு முன்னிலையில் வன கால்நடை மருத்துவ குழுவினரால் நாளை காலை யானையின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6sa

#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *