Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய திருச்சிவாசிகள்

பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத் 
பிரிட்டன் மகாராணியாக 70 ஆண்டுகள் செயல்பட்டவர். இவர் 1952ம் ஆண்டில் தனது 21வயது வயதில் அரியணை ஏறி மகாராணியாக முடிசூடினார். வயது முதிர்வு காரணமாக அவர் சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து டாக்டர்கள் கண்காணித்து வந்தனர். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக செப்டம்பர் 8ம் தேதி இரவில் மகாராணி 2ம் எலிசபெத் காலமானார்.

தனது 96வது வயதில் மகாராணி 2ம் எலிசபெத் காலமாகி உள்ளார். செப்டம்பர் 19ம் தேதி இன்று இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளது. இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது எலிசபெத்தின் உடலுக்கு பொதுமக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திருச்சி கணபதி நகர் கிழக்கு விஸ்தரிப்பு பொதுமக்கள் அருள் ஜோசப் நண்பர்கள் சண்முகம், ராஜா, தங்கராஜ், பன்னீர், தன பர்ஷ ராஜா, துரை, சுரேஷ் ஆழ்வார், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உட்பட பலர் மலர் மாலை அணிவித்து  அஞ்சலி செலுத்தினர். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…    https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6sa

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *