திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த செல்வாஎன்பவர் நேற்று (22.09.2022) இரவு அரியமங்கலம் பால்பண்ணை அருகே உள்ள தனியார் மதுபாரில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த வந்துள்ளார். அப்பொழுது அந்த பார் மூடியிருந்துள்ளது. பாருக்கு வெளியே நின்று இருந்தபோது செல்வா தரப்பினருக்கும் வேறொரு தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது.
அப்பொழுது எதிர்தரப்பினர் செல்வாவை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த செல்வத்தை அவர்களுடைய நண்பர்கள் மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் செல்வா உயிரிழந்தார். இது குறித்து காந்தி மார்க்கெட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த பாருக்கு வெளியே இருந்த சிசிடிவி இரு இருதரப்பும் மோதலில் ஈடுபட்ட காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் செல்வாவை கத்தியால் குத்தியது பாலக்கரை சேர்ந்த விஜயபாபுவாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments