கடந்த 09.08.22தேதி உறையூர் சாலை ரோடு பகுதியில் டிபன் கடை நடத்திவரும் ஒருவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு இருப்பதாக பெறப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சாமிநாதன் என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் சாமிநாதன் மீது காரில் ஒருவரை கடத்தி பணம் மற்றும் செல்போன் பறித்த 1 வழக்கும், பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மற்றும் கொலை மிரட்டல் விடுத்த 5 வழக்குகள் உட்பட 6 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவருகிறது.
கடந்த 20.08.22-ம்தேதி காந்திமார்க்கெட், மணிகூண்டு அருகில் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் மற்றும் செல்போன் பறித்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் அரவிந்த் (எ) ஜாம்பர் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் அரவிந்த் (எ) ஜாம்பர் மீது கத்தியை காட்டி பணம் மற்றும் செல்போனை பறித்த வழக்கும், பூட்டியிருந்த கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடித்த இரண்டு வழக்குகள் உட்பட 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவருகிறது.
எனவே, அரவிந்த் (எ) ஜாம்பர் மற்றும் சாமிநாதன் ஆகியோர்கள் தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், கொலை குற்றங்களில் ஈடுபடுபவர் மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பவர்கள் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட நபர்கள் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்பந்தபட்ட காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments